காதல் பரிசு
தாமரை மலர் போன்ற கை என் உடலெங்கும் தண்ணீரை தெளித்தது
இதெர்கெல்லாம் முன்பே அலாரம் அலறியது
அதை உதறிவிட்டு உறங்கியதால்
படுக்கையறை குளியலறை ஆனது
தேநீரை அருந்திக்கொண்டே
தேதி பார்க்க சென்றபோது
நினைவிற்கு வந்தது ஒரு
சேதி...!
கதை சொல்லும் இரு விழி
அதை பெயரிலும் கொண்ட
என் காதலி கயல் விழி என்ற
கவிதை எழுதப்பட்ட நாள் இன்றல்லவா?..
படபடப்பில் தேநீரை அருந்தி
காஃபி அருமை என்றேன்
குழம்பி போய் குதூகலமாய்
பரிசு வாங்க சென்றேன்
வளையல் வாங்கலாம் என்றால்
அவள் வைர கைகளின் ஜொலிப்பிற்கு ஈடாகாது..!
கொலுசு வாங்கலாம் என்றால்
அவள் அன்ன நடயை நடனம் என எண்ணி
எப்போதும் பாடிக்கொண்டே இருக்குமே...!
மீன்கள் வாங்கலாம் என்றால்
அவள் கண்களை இமை மூடாமல்
கண்டு கழித்தே காலம் தள்ளுமே...!
அய்யோ....! நான் என்ன வாங்க?
அமாவாசை அன்று பௌர்ணமி தோன்றியது போல்
அவள் அழகிய முகம்...!
வீசும் தென்றல் வீழும் விண்மீன்
அனைத்துமே அவளிடம் வாழ்த்து கூறி சொன்றது..!
இவன் இறுதி ஆளாய் வந்தேன்
இதயம் இழகி வாழ்த்து சொல்லி
உள்ளம் உருகி காதலை உளறி
பூத்து விரிந்த மல்லிகை கையில்
அனுதினமும் அவளை வியந்து பாடும்
அழகிய கிளியை
அன்புடன் அன்பளித்தேன்...!
~ ஜெய் கபி
Comments
Post a Comment