தனிமையின் எதிரிகள்


அகன்ற ஆகாயத்தில் 
ஆங்காங்கே கூடிய 
விண்மீன் கூட்டங்கள் நாம்!

மழை துளியானோம்
மண் விழுந்தோம்

தனித்தனி நதிகளில்
வளர்ந்த போதிலும்
கடலில் ஒன்றானோம்...

வெவ்வேறு வெண்ணிற
பூக்களில் படிந்த
வானவில் வண்ணங்கள் நாம்!

இங்கே ஒன்றாய்
நட்பால் தொடுக்கப்பட்டோம்

வரங்கள் கேட்போம்
பல வாரங்கள்
பல மாதங்கள் கேட்போம்
நம் நட்பை சிறப்பிக்க

நம் நட்பை விவரிக்க
நான் முயன்று பார்த்தேன்...

அது கடலை விட ஆழமா?
வானத்தை விட நீளமா?
என எண்ணி எண்ணி 
என்
மூளை வேலை செய்வதை 
நிறுத்திக்கொண்டது!

நீங்கள் நண்பர்கள்
மட்டுமல்ல எனக்கு!

கணினிக்கொரு கடவுச்சொல்லாய்
கண்ணுக்கொரு கண்ணிமையாய்
என்
தனிமையின் எதிரிகளாய்
இனிமையின் துணைவர்களாய்
இனி
என் எல்லாவற்றிலும்
நீங்களும் ஒன்றாய்!
நீங்கள் நண்பர்கள் 
மட்டுமல்ல எனக்கு!

காயமாற்ற நீங்கள் இருக்கும்வரை
காலம் முழுதும்
காயங்களை ஏற்க தயாராகிறேன்!

இந்நொடி போலவே
நம்
இறுதி நொடி வரை
இணைபிரியாமல் இருக்கவே
இதுவரை வேண்டினேன்
இனிமேலும் வேண்டுவேன்...

                     ~ ஜெய் கபி 






Comments