இதுதானா அது?


நீ
பட்டென தொட்டதும்
சட்டென மொத்தமும்
சில்லென்று ஆகி
சில நேரத்தில் மாறி
தேகம் சூடாகி
மீண்டும் உடல் நடுங்கி
உன்
முத்தங்கள் என்னை
முழுதும் மூழ்கடித்து
உனக்கு மறுமுத்தம் தரும்
வாய்ப்பை மறுத்து...
வாழ வெறுத்தும்
வாழ்க்கை பிடித்து...
இதயம் ரசித்த
இந்நொடி 
இன்பத்தில் வெடித்து...

உள்ளம் உருகி
உயிர் கரைந்து
நானும் உன்னில்
ஒன்றானேன் துளியே...
மழைத் துளியே!
 

                ~ ஜெய் கபி 

Comments