நீ... நான்... சாலை...
இந்த சாலையில்
காலை மாலை தெரிவதில்லை!
நேரமும் சாலையும்
உன்னோடு நானிருக்கவே
நீண்டு கொண்டே செல்கிறது!
கடிகார முள்ளும்
உன் ஸ்பீடோமீட்டர் முள்ளும்
பெட்ரோல் முடியும்வரை
என்னை குத்தியதில்லை!
உன்னை
தொட்டுத் திருகினால்
காற்றில்
பட்டு மிதக்கும்
சிறகாகிறேன்!
ஒரே ஒரு ஆசை
நான் இந்த உலகை விட்டு
நீங்கும்போதும் உன்னோடே
செல்ல வேண்டும்.
~ ஜெய் கபி
Comments
Post a Comment