விண் தாவும் கால்கள்!

காதல் பார்வைக்கு
கட்டாயம் எனக்கு
சிறகு முளைக்கும்

சில சமயம் 
குட்டிக் கோபம் கொண்ட 
கண்ணிரண்டு காணக்
கிடைத்தாலும் போதும்

என்னிரண்டு கால்களும்
மண்ணிருந்து விண்ணிற்கும்
விண்ணிருந்து மண்ணிற்கும்
தாவி தாவிக் குதிக்கும்

          ~ ஜெய் கபி 




Comments