முத்தப்பனுவல்

அலுவல்களை அகற்றிவிட்டு 
கவலைகளை கழற்றிவிட்டு 
கையில் வாங்கிய 
மறுகணமே
என் நெஞ்சை
மென் பஞ்சு
போலாக்கி 
பறக்கவிட்ட பனுவல்களை
நீ முத்தமிட்டு அனுப்பிவைத்த
உன் முதல் காதல்
கடிதத்தில் கண்டுபிடித்தேன் 


     ~ ஜெய் கபி 

Comments