நானும் ஓர் இயனன்

நான் ஓர் இயனன் 
நான் படைத்த
எல்லாமே என் நிம்மதிக்குத்தான்
என்றபோதிலும்
ஒரு சின்ன வருத்தம்
நான் உருவாக்கிய 
கதாபாத்திரங்கள்
என்னை பாதித்தவையிலிருந்து
எழுந்ததால்
என் கற்பனை 
உலகம் கூட 
என்னை அடிக்கடி
அழ வைக்கிறது
எனினும் 
நான் ஓர் இயனன் 
இன்னும் இயற்றுவேன் 

          ~ ஜெய் கபி 

Comments