லோலாக்கு
பேருந்தில்
அம்மா மடியில்
படுத்துக்கொண்டு
அம்மாவின் லோலாக்கை
ஆட்டி ஆட்டி
சிரித்து மகிழும்
குழந்தையைப் பார்த்து
கையிலிருந்த ஊக்குகளை
லோலாக்கு போல மாட்டி
ஆட்டி ஆட்டி
சிரித்துக்கொள்கிறாள்
ஊக்கு விற்கும்
சிறுமி ஒருத்தி
~ ஜெய் கபி
Comments
Post a Comment