பௌர்ணமி அவள்

மேலே பௌர்ணமி 
அருகே என் கண்மணி
எங்கே பார்ப்பது
இரண்டும் ஒன்றுதான்

கருவிழிகளும் கயல்விழியென 
இருவிழிகளும் மினிமினியென
கண்மணி அவள் கண் திறந்ததும்
பனி பொழியுது மனம் நிறையுது 
இயற்கை அழகை இடைவிடாமல்
இவள் ரசிப்பதை நான் ரசித்திட
மழை விரும்பிட அலை விரும்பிட
இன்னும் அவளை அவை விரும்பிட
பாவை அவளை பாதி மலர்கள்
மலரெனவே நினைத்ததுமுண்டு
அழகியலுக்கே அகராதி அவள்
பழக பழக பனித்துளி அவள்
சாலைகளெங்கும் அவள் நடக்கையில்
வீசிடும் அங்கு பூக்களின் புயல்
தினம் அவள் முகம் இளவெயிலென
மெல்லிய குணம் மேகங்களென
இசையை விரும்பும் இளமயிலவள்
மென்சிரிப்பும் கண் மயக்கும்
மென் விரல்களை அவளழுத்தியே 
எனை எடுத்திடும் புகைப்படங்களும்
அவள் எடுத்திடும் சுயப்படங்களும்
அதில் மகிழ்ந்திடும் அவள் முகத்தினை
பார்த்துக் கிடக்க காலம் நிறுத்தி
காலம் முழுக்க காத்துக் கிடக்கும்
நான் நானில்லை
இன்றோடு வேறானேன் 

அவளிடம்
நான் வைத்த அன்பெல்லாம்
தீராதே தீராதே

மேலே பௌர்ணமி 
அருகே என் கண்மணி 
எங்கே பார்ப்பது 
இரண்டும் நிலவு தான்

                   ~ ஜெய் கபி 
 

Comments

Popular Posts