விழி ஆட்டி
பிரபஞ்சமே உன் கண்ணுக்குள்ள ஒளியுதா
தேடுறேன் நா அதில் தெரிவேனா
காலத்த உன் கருவிழி நிறுத்துதா
நேரத்த நா இங்க மறந்தேனா
தூறும் மழ தூர நிக்கும்
வெண்ணிலவும் சுட்டெரிக்கும்
வாசல் வர வானம் வரும்
நட்சத்திரம் தெளிக்கும் தெளிக்கும்
நீயிருந்தா நாள் முழுக்கும்
வானவில்லும் நேரா நிக்கும்
கடலலைக்கும் கால் வலிக்கும்
நிண்ணு உன்ன ரசிக்கும் ரசிக்கும்
ஒரு வாட்டி விழி ஆட்டி
என்ன தூக்கி தூர எறிஞ்ச
மறுவாட்டி கண்ண சிமிட்டி
பறந்த மனச தெறந்து நெறஞ்ச
பிரபஞ்சமே உன் கண்ணுக்குள்ள ஒளியுதா
தேடுறேன் நா அதில் தெரிவேனா
காலத்த உன் கருவிழி நிறுத்துதா
நேரத்த நா இங்க மறந்தேனா
காத்திருக்கும் காலத்துக்கும்
காதல் இன்னும் கிட்டருக்கும்
ஒடஞ்சி கொஞ்சம் நொருங்குனாலும்
ஒட்டவச்சு ரசிக்கும் ரசிக்கும்
கெஞ்சலிலும் நெஞ்சினிக்கும்
கொஞ்சலிலும் வம்பிருக்கும்
ஆரம்பிச்சு முடியும் வர
ஆச கொஞ்சம் இருக்கும் இருக்கும்
ஒரு வாட்டி விழி ஆட்டி
என்ன தூக்கி தூர எறிஞ்ச
மறுவாட்டி கண்ண சிமிட்டி
பறந்த மனச தெறந்து நெறஞ்ச
பிரபஞ்சமே உன் கண்ணுக்குள்ள ஒளியுதா
தேடுறேன் நா அதில் தெரிவேனா
காலத்த உன் கருவிழி நிறுத்துதா
நேரத்த நா இங்க மறந்தேனா
~ ஜெய்ஹிந்த் கபிலன்
Comments
Post a Comment