தனிமைத்துணைவன்
சோகங்கள் சூழ்ந்து கருமேகம் ஆனேன்...!
மழைக்காக ஏங்கும் மழலை போல் ஆனேன்...
புழுதிபுயல் வீச புதைந்தேனே...!
குதூகலமாய் நாளும் குரங்கென குதித்தேனே...
இருள் சூழ்ந்த இரவில் மறைந்தேனே...!
இதயத்தை நானும் இடம் மாற்றினேனே...
இனிமையே இன்னும் வரவில்லையே...!
மனம் போன போக்கே கதி என்று போனேன்...
தினம் போல விதியும் சதி செய்ததே...!
கற்பனையில் நானும் கற்சிலை வடித்தேனே...
கண் திறக்கும் முன்பே கல் நொறுங்கியதே...!
அன்பான வீட்டில் அலைந்தாடினேன்- இன்று
ஆளில்லா காட்டில் தொலைந்தேனே...!
கடலின் கரையில் அலையினில் நனைந்தேன்- இன்று
ஆழ்கடலின் அடியில் விழுந்தேனே...!
அழகான பூவின் அருகே சென்றேன்
பார்த்தேன்... ரசித்தேன்... பறித்தேன்...
நுகரும் முன்பே கருகிப்போனதே...!
தேவதையை கண்டேன்; என் வாழ்வின் தேடல் உணர்ந்தேன்...
தேவதையும் சிறகு முளைத்து பறந்து போனதே...
தேனான வாழ்வும் கசந்து போனதே...!
தனிமைக்கு நானே வாழ்க்கைத்துணை ஆனேன்...
தினம் தினம் இறப்பதற்கே பிறந்தேனே...!
~ ஜெய் கபி
Nalla erruku aana patika than nenram ella
ReplyDeleteஅருமை.... நிறைய படி.... இன்னும் எழுதலாம்....
ReplyDelete