காதலோ மழையோ
என்னையும் நனைத்தது.....
கால்கள் தரையில் இல்லை
காலை மாலை தெரியவில்லை
நாட்கள் செல்லவில்லை
நானே என்னில் இல்லை
ரசித்தேன் மழையை.....
ரசித்துக்கொண்டிருந்தேன் மழையை....
குதித்தேன் மழையில்
குளித்தேன் மழையில்
இணைந்தேன் மழையில்
இருந்தேன் மழையில்
நினைத்தேன் மழையில்
நினைவெல்லாம் மழையில்
உண்டேன் மழையில்
உறங்கினேன் மழையில்
உயிர்தேன் மழையில்
உலரினேன் மழையில்.....!
மழை என்னை குளிர வைத்தது
மழை என்னை எரிய வைத்தது
மழை என்னை சிரிக்க வைத்தது
மழை என்னை அழ வைத்தது
மழை என்னை அடித்தது
மழை என்னை அணைத்தது....
மழையில் விழுந்தேன்
மழையில் உரைந்தேன்
மழையில் கரைந்தேன்...!
மழையில் நான்...!
மழைக்குள் நான்....!
எனக்குள் குழப்பம்..!
நான் இதுவரை கூறியது காதலைத்தானே...
அல்லது மழையையா?
~ ஜெய் கபி
Supper
ReplyDeleteஅருமை
ReplyDelete🙂🥰🥰💕💕
ReplyDelete