காயமானவன்
கண்ணீர் துளிகளை
தேக்கி தேக்கி
ஆனதே பெருவெள்ளம் எனக்குள்ளே
தினம் வரும் கனவை
நீக்கி நீக்கி
தூக்கமும் கூட வரவில்லையே
இருப்பதை எல்லாம்
இழக்க இழக்க
எனக்கென ஏதும் இல்லையே
எந்தன் வலிகளை
அளக்க அளக்க
வருகின்ற வலிக்கு முடிவில்லையே
என் நிலவு தேயவில்லை
கொஞ்சம் கொஞ்சமாய்
அது மாயமானதே
சோகமே நீ
வேண்டும் வேண்டும்
என்று நான் கேட்கவில்லையே
ஏனோ நீ
மீண்டும் மீண்டும்
வருவதை நிறுத்தவில்லையே
வாழ்கிறேன் நான்
ஏன் ஏன்
என்று விளங்கவில்லையே
இறப்பை விட
பெரும் பெரும்
இருப்பு இருக்குமென நினைக்கவில்லையே
இருப்பினும் வாழ்கிறேன்
இறந்து இறந்து
இனி பழகிவிடும் கவலையில்லையே
காதல் அது
மெய்யோ பொய்யோ
இருப்பதாய் எனக்கு தெரியவில்லையே
என்ன வாழ்கையிது
ஐயோ ஐயோ
இதெர்கென்னை கொன்றிருக்கலாமே
~ ஜெய் கபி
Comments
Post a Comment