ஊரடங்கு 2020
ஊரடங்கு
யாரடங்குவாரோ?
கடைகள் அடைப்பு என்றார்கள்
அடைப்பு தான்
ஆனால், பூட்டவில்லை
வெளியில் செல்ல தடை என்றார்கள்
தடை தான்
ஆனால், நடை நிற்கவில்லை
கண்முன்னே இழப்பு ஏராளம்
கவனம் என்றார்கள்
இழப்பு தான்
ஆனால், பொழப்பு நடக்காமல் இல்லை
வெளியில் செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் என்றார்கள்
முகக்கவசம் கட்டாயம் தான்
ஆனால், அது முகத்தில் இல்லை
தடுப்பூசி போடுங்கள் கொரோனா குறையும் என்றார்கள்
கொரோனா குறையும் தான்
ஆனால், தடுப்பூசி குழப்பம் குறையவில்லை
கூட்டம் கூடாதீர்கள் என்றார்கள்
கூடவில்லை தான்
ஆனால், ஒன்று சேர்கிறார்கள்
வழக்கம் போல் அலையாதீர்கள் என்றார்கள்
வழக்கம் போல் இல்லை தான்
ஆனால், பழக்கம் போல் அலைகிறார்கள்
இதுதான் ஊரடங்கு என்றார்கள்
ஊரடங்கு தான்
ஆனால், யாரடங்குவாரோ?
~ ஜெய் கபி
Comments
Post a Comment