மாலைப்பொழுது
சூரியன் கடலை முத்தமிடும்பொழுது
சில இடங்களில் மலைகளின் பின்னே ஒழிந்திருக்கும்பொழுது
நிலவு வேலைக்குச்செல்ல தயாராகும்பொழுது
பகலின் பிற்பொழுது; இரவின் முற்பொழுது
வெப்பக்காற்றின் பணி முடியும்பொழுது
தென்றல் காற்றின் பணி தொடங்கும்பொழுது
கூட்டுப்பறவைகள் கூடு திரும்பும்பொழுது
கூலித்தொழிலாளர்கள் வீடு திரும்பும்பொழுது
தெருவிளக்கு எரியும்பொழுது; நிழல் தெரியும்பொழுது
தேநீர் அருந்தும் பொழுது -கூடவே
முறுக்கை கடிக்கும்பொழுது
சிலர் உறங்கி எழும்பொழுது
கதிரவன் கிறங்கி விழும்பொழுது
கொசு கடிக்கும்போழுது; அதை நாம் அடிக்கும்பொழுது
கோயில் நடை சாத்தும்பொழுது
கால்நடைகள் வீடடையும்பொழுது
கடல் அலை வேகம் குறையும்பொழுது
பாட்டியிடம் கதை கேட்க அமரும்பொழுது
கண்ணாமூச்சி விளையாடும்பொழுது
மின்மினிப்பூச்சி வெளியே வரும்பொழுது
மேகம் களையும்பொழுது
விண்மீன்கள் விளையும்பொழுது
மனதை இதமாக வருடும்பொழுது
மாலைப்பொழுது....!
~ ஜெய் கபி
Comments
Post a Comment