திருமண வீடு
திருமணம்
திருமகளுக்கும் திருமகனுக்கும் திருமணம்
பத்திரிக்கையில் பெயர் பிரச்சனையில் தொடங்கி
பந்தியில் தயிர் பிரச்சனையில் முடிந்து
காசு பிரித்து கட் அவுட் வைத்து
காலி கவரில் மொய்யும் வைத்து
ஊருக்கு வெளியே பாட்டு சத்தமும்
ஊருக்குள்ளே வேட்டு சத்தமும்
புகைப்படக்காரரை பாடாய் படுத்தி
நகைகள் கடன் வாங்கி புத்தாடை உடுத்தி
பாத்திரத்தில் எடுப்பு சாப்பாடும்
பாடலுக்கு கூச்சலும் கூப்பாடும்
குழந்தையின் ஆட்டமும்
குறை சொல்லும் கூட்டமும்
முடியும்போது திருடும் களவும்
முடிந்த பின்பு வரவும் செலவும்
சரக்கும்
சண்டையும்
ஆனாலும் அன்போடு
அதுதான் எங்கள் திருமண வீடு
~ ஜெய் கபி
Comments
Post a Comment