கவிதைக்கோர் கவிதை


என் கவிதைக்கு கவிதை எழுத
       கனவுலகில் காத்திருந்தேன் 
கவிதையும் வந்தது கவிதையும் வந்தது...

வண்ணங்கள் சேர்த்து வர்ணிக்க ஆரம்பித்தேன் 
கனவல்லவா? கலைந்து போனது...

என் மலருக்கு மலர் வாங்க 
     மலர்வனத்தில் காத்திருந்தேன் 
மலரும் வந்தது மலரும் மலர்ந்தது

மலரும் அழகை மயங்கி நின்று ரசித்தேன்
மலரல்லவா? என் மலரை பார்த்து வாடிப்போனது..

என் அழகிற்கு அழகு சேர்க்க 
     ஆபரணங்கள் தேடி நின்றேன்...
அழகும் வந்தது ஆபரணமும் கிடைத்தது...

ஆபரணத்தின் ஜொலிப்பில் சொக்கிப்போனேன் 
ஆபரணமல்லவா? என் அழகியை பார்த்ததும் மதிப்பற்று போனது...

என் நிலவிற்கு நிலவைக் காட்ட 
     நிலவு வரும் வரை காத்திருந்தேன்...
நிலவும் வந்தது நிலவும் வந்தது 

இரவின் குளிரில் நிலவைப் பார்த்து நின்றேன்
நிலவல்லவா? என் நிலவைப் பார்த்து தேய்ந்து போனது...

என் கவிதைக்கு ஒரு கவிதையும் 
      எழுதி முடித்திருந்தேன்...
கவிதையே வந்து என்னிடம் கவிதையை கேட்டது...

எழுதி வைத்ததை எடுத்துக் கொடுக்க நினைத்தேன்
ரசிகனல்லவா? என் கவிதைக்கு முன் நான் எழுதிய கவிதை
ரசனையற்று போனது...


            ~ ஜெய் கபி 

Comments

Post a Comment

Popular Posts