கானம்


கலவர பூமி கண்ணுறங்கிய நேரம்
கலை கட்டியது கச்சேரி

உறக்கத்தை உசுப்பேத்தாத
காதோரம் கசப்பேத்தாத கச்சேரி 

இடியும் மின்னலும் இந்த கச்சேரியை தொடங்கி வழங்க 
ஓநாயும் நரியும் அவர்கள் பங்குக்கு எதோ முழங்க 

ஆண் குயில் காதல் சொல்ல
பெண் குயிலும் அதை ஏற்றுக்கொள்ள

மழைத்துளி பாறையில் தாளம் போட
தவளைகள் தாளதுக்கு ஜதி பாட

மின்மினி பூச்சுகள் கொஞ்சி கொலாவ
ஆந்தை அங்குமிங்கும் பாடி உலாவ

மரமெங்கும் கிளைகள் அசைக்க
              இலைகள் இசைக்க

காதல் கிளிகள் அடுத்த பாடலுக்கு ஒத்திகை பார்க்க
தூக்கணாங்குருவிகள் கூட்டுக்குள் சத்தமாய் முத்தங்கள் சேர்க்க

ஆற்றில் மீன்கள் தாம் என்ன செய்ய என்று யோசிக்க
ஒரு தென்றல் ஆயிரம் புல்லாங்குழல் வாசிக்க

அளவற்ற இந்த இசைகளில் மூழ்கும்
எண்ணற்ற பார்வையாளர்களுக்கு மத்தியில்

இந்த அழகை மேலிருந்து பார்த்து
                            பார்த்து
ரசிக்கிறாள் வென்சிரிப்புடன் அவள்...


                        ~ ஜெய் கபி

Comments

Popular Posts