வலிமகள் I
யாரோ செய்தாரோ பிழையே
எனக்கேன் தந்தாரோ வலியே?
சோகம் சொல்லாதோ பதிலே?
பாவம் அறியாமல் இவளே...
காலம் கரைந்திட கரைந்திட
கண்கள் கலங்கிட கலங்கிட
நானோ தனிமையின் துணையுடனே
செய்யாத தவறுக்கு
வீணாக பழி ஏனோ?
தானாக புரிகிறதே
காரணம் என் பிறப்பே...
வானம் பொழிந்திட பொழிந்திட
காலை விடிந்திட விடிந்திட
ஏனோ என் வலி செல்ல வழி இல்லையே....
~ ஜெய் கபி
Comments
Post a Comment