வலிமகள் II
மீனாய் பிறந்தது என் தவறா?
வீணாய் பழி ஏனோ?
தேனாய் நினைத்த என் வேலை
தேளாய் தீண்டியதே...
கானல் நீராய் என் கோபம்
காலம் பதில் சொல்லுமா?
பிரிவினை எனும் பெட்ரோலை
ஊற்றி ஊற்றி ஊறவைத்து
பொறாமை என்னும் தீயால்
எரித்தால் என்னாவேன் நான்?
தலைக்கனமான தலைமையால்
நீதி நேர்மை நியாயம் கொன்று
அநீதி என்னும் அதிகாரம்
அழித்தால் என்னாவேன் நான்?
ஜாதி மதம் என்னும் கத்திகளால்
வெட்டி வெட்டிக் கூறு போட்டு
ஆதிக்கம் என்னும் பாத்திரத்தில்
பொறித்தால் என்னாவேன் நான்?
~ ஜெய் கபி
All the best Nanba
ReplyDelete