சாதனையாளனின் சாவு


சாகாமலிருக்க அவன் சாகசக்காரனில்லை
சாகுமளவிற்கு அவன் சாதாரணமானவனில்லை
ஆனாலும்,
சாவான்
சாதனை வரும் வரை
வாழ்வான்
சாதனை தீரும் வரை

சாகும்போதே வாழ்வதும்
வாழும்போதே சாவதும்
அல்பத்தனமான அல்லல் அவனுடையது

சாதிக்கும் முன் அவன் வாழ்க்கை
ஆழ்கடலில் மூசுவிடுவது போல்
அவ்வளவு எளிதல்ல

சாதா ஒருவன்
சாதனையாளனாக ஆகும் வரை
சாவும் வந்து வந்து போகும்

சாதனையாளனாக ஆன பிறகு
சாவுடன் வாழ்வது
நடப்பது பார்ப்பது போல்
தன்னிச்சையாகிவிடும் 

சாதனையாளனக்கு -அந்த
சாவு தேவைப்படுகிறது
சாவை அவன் தெரிந்தே
அழைக்கிறான்; ஏற்கிறான்

ஆகவே
சாதனையாளனின் சாவு
தற்சாவு நிலை
அது
சாதனைக்கான
சாதாரணமானவனின் தற்கொலை

இந்த தற்கொலை
உயிரை அழிக்காது
உயிரை உயிர்க்கும்
உயிரை புத்துயிர்க்கும்...

                         ~ ஜெய் கபி

Comments

Popular Posts