என்னில் நீ
பனித்துளி நீயென
இமயம் ஏறி தேடினேன்
என்
வீட்டுப் புல்லின் நுனியில் நீ
தீப்பொறி நீயென
சூரியன் சென்று தேடினேன்
என்
தேகத் தனலில் நீ
புத்தகம் நீயென
நூலகம் போய் தேடினேன்
என்
கவிதையின் வரிகளில் நீ
எங்கே நீயென
எங்குமே தேடினேன்
என்னில் நீ
~ ஜெய் கபி
Spr da
ReplyDeleteவாழ்த்துகள் நண்பா
ReplyDelete