பேருந்தின் படிக்கு மட்டுமே தெரியும்
ஊருக்கு நான் புதிது
உனக்கும் தான்
வேலை தேடுவதையே
வேலையாக செய்து வந்தேன்
இப்போது
வேலை கிடைத்த பின்னும்
உன்னை
வேளை தவறாமல்
காண மறவேன்...
அன்றாடம்
உன்
பேரழகைப் பார்க்கவே
பேருந்து நிறுத்தம் வருவேன்
பேருந்தில்
கால் வைக்கக் கூட
காலியிடம் இல்லா நெரிசல்
ஆனால்,
எனக்கோ
உன்னையும் என்னையும் தவிர
ஓட்டுனர் நடத்துனர் கூட
கூட இல்லை
பேருந்து மட்டும்
நம்மை
சுமந்து மிதந்து
செல்வதாய் உணர்வேன்..
உன்னை பார்ப்பது
மட்டுமே
என் அன்றாட லட்சியம்
என்னை பார்ப்பாய்
என்றாவது நீ
அந்நாள் நிச்சயம்..
அது
பேருந்தின்
படிக்கு மட்டுமே தெரியும்...!
உன்னைப் பார்க்க
பரபரக்கும் என்
பாதம் பாடிய பாடல்...
உன்னைச் சந்திக்க
சரசரக்கும் என்
செருப்பு கொண்ட தவிப்பு...
உன்னைக் காண
கடுகடுக்கும் என்
கால்கள் ஏங்கிய காலம்...
அந்த
பேருந்தின்
படிக்கு மட்டுமே தெரியும்..!
~ ஜெய் கபி
Comments
Post a Comment