இசையோடு இசையும்போது


இசையோடு இசையும்போது 
இமயம் செல்வேனே...
சோகம் கோபம்
கவலை வரும்
சமயம் வெல்வேனே...

இருகிப்போன இதயமும்
இலகுவாகுதே
என்
கண்கள் மூடியிருப்பினும்
காட்சி தெரியுதே...

வெற்றுணர்ச்சி கொண்ட மனம்
புத்துணர்ச்சி பெறுமே....
சத்தமிடும் கெட்ட மனம்
சற்றமைதி பெறுமே....

இசையோடு இசையும்போது
மௌனம் கொள்வேனே...
தீங்கு தரும்
தீய எண்ணம்
யாவும் கொல்வேனே....

                   ~ ஜெய் கபி

Comments

Popular Posts