இறுகிய இதயக்காரி.!
இறுகிய இதயக்காரி...
குறுகிய உன் இடையை
குறுகுறுவென பார்த்தது
குத்தமா..!
முத்தம் கேட்டாலும்
சத்தம் காட்டாமல் இருக்கிறாயே..!
கருகிய குழல்காரி
உருகிய நிலவடி நீ
பாவப்பட்ட ஓவியன் நான்
கொள்ளை அழகு உனது
ரசித்தேன் உன்னை
ஆமாம்
என்னை மறந்து
உன்னை ரசித்தேன்...
அதுதானடி என் வேலையே..
அதற்கா இப்படி..!
எதற்கடி இதழ் திறக்காமல்
என்மேல் மௌன அம்பை
எய்கிறாய்...
இறுகிய இதயக்காரி...
உன்
இதயம் இதமாகி
என்மேல் அன்பாகு அன்னமே...
~ஜெய் கபி
Super 🥰
ReplyDelete