நிலவ்விழியொளியே...!


அடி அடிக்கரும்பே
துடி துடிக்கிறேன்
கரு கருவிழியால்
உருக்குலைக்கையில்...

நொடி நொடிப்பொழுதே
கடி கடித்துவிட்டாய்
தரத் தரமறுத்தாய்
மறு முத்தம்...

சிறு சிறுச்சிரிப்பில்
சர சரவென
வெடி வெடித்துவிட்டாய்
அடிமனதில்...

கல கலவென நீ
கதை கதைக்கையிலே
வள வளவென நீளுது
நேரம்...

பர பரக்கவைத்தாய்
பற பறக்கவைத்தாய்
ஜொலி ஜொலிக்கவைத்தாய்
உன்
நிலவ்விழியொளியால்..!

                     ~ ஜெய் கபி

Comments

Post a Comment

Popular Posts