புரியும் நாள் வரும்
"உன்னைப் பார்க்கும்போது எனக்கும்
என்னைப் பார்க்கும்போது உனக்கும்
எழுகிறதே ஒரே வினா
இரவில்
வருகிறதே ஒரே கனா
இதுதான் காதல்...
இதிலென்ன குழப்பம்?
இது நம்
இருவரின் விருப்பம்"
"குழப்பமல்ல கண்மணி
தயக்கம்"
"ஏன்?"
"நீ நிலவென்பதால்
உன்னை நான்
காதலிக்க கூடாதாம்...
அதற்கு
நானும் நிலவென்பதைக்
காரணம் கூறுகிறார்கள்
இந்த
மூளை சுருங்கிய சூரியன்கள்."
"அதனாலென்ன?
அவர்கள் அப்படிதான்..
தாங்கள் தான் இயற்கை
தங்களால் தான் இயற்கை
என ஏமாந்து கொண்டிருப்பவர்கள்
பாவப்பட்டவர்கள்
காதலுக்கென்ன தடை?
காதலுக்கேது கடை?
இந்தக் காதல்
சூரியனுக்கு நிலவின் மீதும்
நிலவுக்கு சூரியன் மீதும்
மட்டுமல்ல
சூரியனுக்கு சூரியன் மீதும்
நிலவுக்கு நிலவின் மீதும்
விண்மீனுக்கு விண்மீன் மீதும்
வரலாம் என்பதை
புரியும் நாள் வரும்.
இது மட்டுமா?
இன்னும்
வானவில், மழை, கடல்
என ஏராளம்
இதில்
யாவர்க்கும்
யாவர் மீதிலும்
காதல் வரும்.
வந்தே தீரும்.
கவலை விடு
கண்மணி"
~ ஜெய் கபி
Nice brow
ReplyDelete