புன்னகையால் புதைத்தக் கணம்..


பகல் நிலா உன்னை
பார்த்தக் கணம் - என்
இதயத்தில் மட்டுமல்ல
இயற்கையிலும் மாற்றமே...

வானும் கடலும்
நீலம் இல்லை
கலர்கள் மாறுதே..
மேகம் 
தூறல் தூறவில்லை
மலர்கள் தூவுதே...

ஊரெங்கும்
புயல் காற்று
பூவையள்ளி வீசுதே..
இடியும் வந்து
உன்னிடம்
இன்பத் தமிழில் பேசுதே...

அலைகள் ஓய்ந்துவிட்டன
இலைகள் காய்ந்துவிட்டன
உன் புன்னகை வேண்டி...

உன் செவ்விதழ்
சிரிப்பை விரித்ததும்
அலைகள் பாறையில்
பட்டு தெறிப்பதென்ன..!
இலைகள்
சிலைகளிலும் கூட
தளிர்ப்பதென்ன..!

ஆனால்,
என்னை மட்டும்
உன் புன்னகையால்
காற்றைத் தோண்டி
நின்றபடியே
புதைத்துவிட்டாய்...

              ~ ஜெய் கபி

Comments

Post a Comment

Popular Posts