உன் பிரிவு...


பிரிவு...
இதை வாசிக்கும் யாவர்க்கும்
வலி தரக்கூடிய வார்த்தை...

எதிர்பார்க்கவில்லை உன்னிடம்
எதார்த்தம் எனக்கூறி
பிரிவாய் என்று...

பனித்துளியும் சுடும்
மணித்துளி நீ பிரிந்தால்
இனி என்
நிகழ்வலை ஓய்ந்துவிடும்
உன்
நினைவலை ஓயாதே...

இன்றும்
நாம் சென்ற இடங்களை
நான் கடக்கும்போது
நானிருப்பது
இன்றிலல்ல 
என்றோ நாம்
ஒன்றாயிருந்த நொடியில்...

உனக்கப்படி தோன்றாமல்
மனமெப்படி இருக்கிறது?

நீ என்னைப் பிரிந்த
கடைசி நொடி
கண்ணீர் வந்தது..
இப்போதெல்லாம் 
கண்களில் அல்ல
இதயத்தில் வடிகிறது...

சரியான காரணம்
கூட கூறாமல்
பிரிந்த நீ
காரியக்காரன் என்று
நினைக்க மனம் ஏற்கவில்லை...

நான் தான்
நம்பி ஏமாறும் கலையில்
சிறப்படைந்திருக்கிறேன்
என்ற பெருமிதம் எனக்குள்...

நீ பிரியும் முன்
உடலிரண்டு உயிரொன்று
என நினைத்தேன்..
நீ பிரிந்த பின்
உடலொன்று உயிரொன்று
கூடவே 
வலியொன்று வரக்கண்டேன்...

                  ~ ஜெய்ஹிந்த் கபிலன் 

Comments

Popular Posts