சர்க்கரை நிலவே...


பால்யத்தில் உன்னைக் காட்டி
பால் சாதம் ஊட்டும் போது
நா மட்டுமல்ல
நானும் இனித்தேன்...

அடம்பிடித்து 
அழுத கண்ணீரும்..
காதல் பிரிவில்
கசிந்த கசந்த கண்ணீரும்..
ஏனோ நீயிருந்ததால்
இதழைத் தாண்டியதும்
இனித்துவிட்டது எனக்கு...

தேநீரும் 
உன்னோடு பருகினால்
தேனீராகிவிடும்...

இன்னும் எத்தனை
இனிய நினைவுகள்
உன்னைப் பார்த்ததும் - என்
இதயத்தில் வழிகிறது
தெரியுமா
சர்க்கரை நிலவே..!

               ~ ஜெய் கபி 


Comments

Popular Posts