நினைத்தாலும் நினைக்காமல் இருக்க முடியாது...


என்
உள்ளம் முழுதும் ஊடுருவி
உறைந்த உனது நினைவுகளை
ஒரு நொடியில்
மறந்துவிடு எனக் கூறி
மறைந்துவிட்டாய்...

நீ
போனவள் போனவள் தான்...
திரும்பி வரப் போவதில்லை

ஆனால்,
உன்னிடம் எப்படி சொல்வேன்?..
உன் நினைவுகளை 
என் இதய அறைகளில் 
மட்டுமல்ல
மூளையின் ஒவ்வொரு செல்களிலும்
மறைத்து வைத்திருக்கிறேன்...
இனி நானே
நினைத்தாலும் உன் நினைவுகளை
நினைக்காமல் இருக்க முடியாது
என்று
உன்னிடம் எப்படி சொல்வேன்?...

                       ~ ஜெய் கபி 

Comments

Post a Comment

Popular Posts