மீண்டும் நனை எனை!
அடி பாவி!
உனக்கென்ன...
என்னை நனைத்துவிட்டு
சென்றுவிட்டாய்
உன்னை நினைத்து- தினம்
நான் படும் பாடு...
அறிவாயா நீ!
தினமும் உன்னை
தேட வைக்கிறாய்
தேடியே முகம்
வாட வைக்கிறாய்
காற்று குளிர்ந்தாலே
நீயும் துளியாய்
வருவாய் - என
காத்திருப்பேன்
மண் மணம்
வீசினாலே
நீ என்னோடு
பேசுவாயே - என்று
பார்த்திருப்பேன்
அதென்ன..!
சில நேரம்
இரவில் வருகிறாய்...
உறங்கிய என்னை
ஜன்னல் வழியே
உசுப்புகிறாய்
தெருவிளக்கின்
கீழே - நீ
விழுகிறாயா?
அல்லது
விழுவது
வெளிச்சமா?
மின்னல்
உன் சாலையின்
சிக்னலா!
இடி
உன் ஹாரன்
சத்தமா!
நீ மீண்டும்
என்னை நனைக்க
ஆசை
உன்னை நினைத்துக் கொண்டிருப்பேன்
வந்துவிடு...
~ ஜெய் கபி
Comments
Post a Comment