நான் நான் தான்


நிகழ்காலத்தில் இருந்துகொண்டு
கடந்த காலத்திலும்
எதிர்காலத்திலும் வாழ்வதால்

நிலா மீதும் மழை மீதும்
காதல் கொள்வதால்
மேகம் மேலே மோகம் கொள்வதால்

இயற்கையின் இடுப்பை
இடைவிடாமல் ரசிப்பதால்
சில சமயம்
அந்த இடுப்பில் 
ஏறி உட்காருவதால்

நடக்க பிடித்திருப்பதால்
பழைய நினைவுகளை
கடக்க முடியாதிருப்பதால்

நான் நானாக இருந்துகொண்டு
என்னுள் பல பேராக வாழ்வதால்

வாசிப்பும் எழுத்தும் பிடித்துவிட்டதால்
பிரபஞ்சத்தில் நானும் 
தூசியாகி கலந்துவிட்டதால்

நான் கவிஞன் அல்ல
நான் மனிதன் அல்ல
நான் நான் தான்.

           ~ ஜெய் கபி 

Comments

Popular Posts