இரவில் இரயிலில்
இரவு.
நடு இரவு
முழு நிலவு
கருப்பு கடல்
அதில் துள்ளி குதிக்கும்
சில வெண்மீன்கள்
இதயம் வரை சென்று
இதமாக்கும் குளிர் காற்று
பார்த்தவுடன்
பழகி பல காலம்
ஆனது போல
சிரிக்கும் குழந்தை
முன் பின்
அறிந்திரா நபர்கள்
சொல்ல கேட்ட
தெரிந்திரா கதைகள்
குலுக்கி குலுக்கி
தாலாட்டி தூங்கவைத்து
பின் திடீரென்று
சங்கூதி எழுப்பி விட்டு
இரவு முழுதும்
உருண்டும் புரண்டும்
தூங்கிய
அரை தூங்கங்கள்
கால் தூக்கங்கள்
முடிவு தெரியா கனவுகள்
இதற்காகவே விரும்புவேன்
இரவு நேர ரயில் பயணங்களை...!
~ ஜெய் கபி
Comments
Post a Comment