காதல் சொல்ல வந்தேன்!
காதல் சொல்ல
உன்னைத் தேடி
உன் வீட்டின் சுவரருகில் நான்...
சிறிது நேர காத்திருப்பிர்க்குப்
பிறகு சிறகு முளைத்த
தேவதையாய் என் முன்னே நீ...
மேலே பிறைமதி
கீழே முழுமதி!
உன்னோடு போட்டி போட முடியாமல்
மேகத்தினுள் ஒளிந்துகொண்டது நிலா!
உன் தலை முடி கோதிவிட்டுச் செல்லவே
காத்திருந்த காற்று
நீ வந்ததும் குதூகலமாகி
உன் கூந்தல் தீண்டி மோச்சம் பெற்றது!
உன் கண்களை மூடாதே
என் கண்களால் உன்னை
படம் பிடித்துக் கொள்கிறேன்.
ஏனென்று தெரியவில்லை
இந்த இரவு
என்
இறுதி இரவாய் இருந்தாலும்
பரவாயில்லை என்று தோன்றுகிறது.
எதுவும் பேசாதே
உன் குரல் கேட்டு,
தூங்க சென்ற சூரியன்
உன்னைக் காண எழுந்து
வந்துவிடப் போகிறது!
காதல் சொல்லவே வந்தேன் உன்னிடம்
என்ன சொல்ல? என்ன பேச?
என் உடல் மட்டும் இவ்விடம்
நான் இல்லை என்னிடம்.
யாரோ சொல்லக் கேட்டு
என் கையிலோ சாக்லேட்டு
ஒரு சின்ன கணிப்பு
உனக்கு இனிப்பு பிடிக்குமென்று
ஆனால்,
தெரியாமல் வாங்கிவிட்டேன்.
உன்
இதழை விடவா
இனிப்பு
இருந்து விடப்போகிறது
இந்த உலகில்!
காதல்.
அதை சொன்னால் தான்
புரியுமா உனக்கு?
உன் முன்னால்
ஒரு வார்த்தை கூட வராமல்
உன்னை ஓவியம் போல
பார்ப்பதிலேயே புரிய வேண்டாமா?
தயவு செய்து
பேசாமலே புரிந்துகொள்
என் காதலை...
நானே பேசவேண்டும்
என்று எதிர்பார்க்காதே.
காரணம்:
மூளை வேலை செய்யவில்லை
மனம் கனமாகிவிட்டது
ஏதாவது உலரிவிடப் போகிறேன்
உன்னிடமே உன்னைப்பற்றி!!
~ ஜெய் கபி
Ithu ennutaiya life la natathurukku nanba ithu Mari oru nalla story eluthi direct Pannu nalla varum ennaiya Mari neraiyaah fans followers varum wait Pannu ithaah mattum vitturathaah
ReplyDelete