ஜெய்க்கூ
வானத்தில் சிறு இறகு
கையில் குழந்தை..!
நடு இரவு
யாருமற்ற வீதி
மின்கம்பியில் ஒற்றைக் காகம்!
குளத்தில் அழகான மீன்கள்
விடுதியின் ஜன்னல் வழியே
தெரியும் கண்கள்!
ஈசல்களுக்கு மத்தியில்
நிலவைத் தேடி நான்!
வலிக்குமென்று தெரிந்தும் கூட
கொடுத்து விடுகிறோம்
வலிகளை...
புகழிடமாக ஒரு புகலிடம்
தேட விரும்பவில்லை
நானே புகழிடமாவேன்!
Comments
Post a Comment