பிரிவுக்கு முன் பரிவு
பல நாட்களுக்குப் பின்
அவளிடமிருந்து வந்த கால்...
கால்கள் தடுமாறி
கைகள் படபடத்து
அட்டன் செய்தேன்
"ஹலோ" என்றேன்...
பதிலுக்கு ஹலோ கூட
வரவில்லை
இது கடைசி கால்
இல்லையென்று
ஒரு சிறு நம்பிக்கை
மறுகணம்
"ஒருவேளை
இதுவே இறுதியாயிருந்தால்"
என்று தோன்றவே
கண்ணீரோடு
வார்த்தைகளை பொழிந்தேன்.
"உனக்கு பிடிக்காத
மாதிரி மாறிவிட்டேனா?
உன்னை
கஷ்டப்படுத்திவிட்டேனா?
உன்னை
வீட்டில் கூண்டுக்குள்
வைத்துவிட்டார்களா?
நான் வீட்டில்
வந்து பேசவா?
பேசு
ஏதாவது பேசு
திட்டு
கெட்ட வார்தையிலேனும் திட்டு
உன் குரல் கேட்டு
என் கண்ணீர் இனிக்கட்டும்!"
மூச்சுவிடும் சத்தமேனும்
கேட்குமென காத்திருந்தேன்
இல்லை
சத்தமே இல்லை.
தேனாய்
வார்த்தை வழியும் இதழ் திறக்காமலிருந்தது
எனக்கு மேலும்
பயத்தைக் கொடுத்தது
மறுபடியும்
வருத்தங்களை
வர்ணிக்க ஆரம்பித்தேன்!
"இப்படியே வேண்டாம்
இருவரும் ஒருமுறை
நேரில் பார்த்து பேசலாம்
பல மாதங்களாக
தினமும் என்
நினைவிலிருந்த
உன்னை
திடீரென மறப்பது
முடியாத ஒன்று
ஏன்?
என்னோடு வாழ
விருப்பமில்லையா?
பேசிவிடு
உன் மௌனம்
முழுவதும் என்னை
கொலை செய்யும்முன்
பேசிவிடு
உன்னிடம் கெஞ்சுவது
எனக்கொன்றும் புதிதல்ல
ஆனால், இம்முறை
கெஞ்சிக்கொண்டு மட்டுமே
இருக்கிறேன்.
உன்னிடமிருந்து
ஒரு சொல் கூட
வரவில்லை.
படபடவென்றாகிறது எனக்கு
இனி வழிய
கண்ணீரில்லை!"
இவ்வளவு
பதை பதைப்பிற்குப்
பிறகு
அவளிடமிருந்து
வந்த அந்த
வார்த்தை
"என்னை மறந்துவிடு.
இனி உன்னை
கஷ்டப்படுத்த விரும்பவில்லை.
உனக்கு என்னைவிட
சிறந்தவள் கிடைப்பாள்."
அன்று அவளால்
துண்டிக்கப் பட்டது
கால் மட்டுமல்ல
என் இதயமும் தான்!
அவள் கூறியதிலேயே
எல்லாம் புரிந்து விட்டது!
எனினும்,
இப்படி ஒரு
பெண்ணால்
சில காலம்
காதலிக்கப்பட்டிருக்கிறேன்
என்ற ஒன்றே
இனி என்
நினைவெல்லாம்
நீளும் என்று
எனக்கு நானே
ஆறுதலாகி
என்னை நானே
ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்!
இது ஒரு
அதிஷ்டம்.
அனைவருக்கும்
அமையாது.
நான்
அதிஷ்டசாலி!
~ஜெய் கபி
Comments
Post a Comment