கவியெழுதும் எனக்கு...
காடு, மலை தேவையில்லை
கரையோரம் தேவையில்லை
வான்வெளியில் திரிவதால்
புல்வெளியும் தேவையில்லை
மாலை வேளை தேவையில்லை
மழை பெய்ய தேவையில்லை
தென்றல் வீசத் தேவையில்லை
பெண்கள் பேசத் தேவையில்லை
கற்பனையில் வாழும் எனக்கு
கண்முன்னே இவற்றையெல்லாம்
உருவாக்கத் தெரிவதால்...
அழுக்குத் துணிகளால்
அலங்கரிக்கப் பட்ட
பேச்சுலர் ரூமிலும்
நேச்சுரலாய் வரும்
கல்லறையிலும்
காதல் கவிதை வரும்.!
தெரியவில்லை...
என் கற்பனை
என்னை எங்கு
கொண்டு சேர்க்குமோ
ஒருவேளை..
நானிருக்கும்போதே
என்னிறப்புக் கவியும்
நானிறந்த பின்பு
என் பிறப்புக் கவியும்
எழுதலாம்...!
~ ஜெய் கபி
Comments
Post a Comment