நிலவருகிருக்க ஆசை..!


பார்த்தவுடன் வந்து 
 ஒட்டிக்கொண்டது பதைபதைப்பு
வேர்த்து விடுகிறது
 கிட்டநின்று பேசநினைக்கையில்
கோர்த்தக் கைகளோடு
 வட்டநிலா முகம் பார்த்து
காதல் சொல்வதே கனவெனக்கு
 அம்மாலை மழைபெய்யின் சுகமெனக்கு

அந்நிலவின் அருகே
 அனுதினமும் அமர்ந்து பேச
பெண்ணிவளின் நாணம் - எனை
 நூறுதுண்டாய் வெட்டி வீச
வெண்பனிபோல் வீழும் - அவள்
 சிரிப்பை சிறைப்பிடித்து வாழ
அனுதினமும் அந்நிலவருகிருக்க ஆசை!

                ~ ஜெய் கபி 

Comments

Popular Posts