மழலைக் கீச்சு


புரியாமல் போனேன்
என்னதான் அது என்று..!

புல்லரித்துப் போனேன்
புதுக் கவிதையென்று..!

பூரித்துப் போனேன்
புதுயிசையென்று..!

இறுதியில் வியந்தேன்...

அது 
புதுக் கவிதையில்லையாம்
புதுயிசையில்லையாம்
மழலைக் கீச்சாம்..

      ~ ஜெய் கபி 

Comments

Post a Comment

Popular Posts