தத்தளிக்கும் தீவு


மனதுக்கு நெருக்கமானவர்களாலே
மனது நொறுக்கப்படுவது...

நடு இரவில்
நடு கடலில்
நிலா துணை கூட இல்லாத
ஒரு தத்தளிப்பு போன்றது

மூச்சு முட்டும்
மூழ்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற
பட படப்பு உள்ளம் முழுதும்...

கரை தெரியாது
சுற்றி முழுதும் இருள்
உடல் முழுதும் குளிர்

சொர்க்கம் போலவே
இந்த நரகமும்
அழகியல் சூழ்ந்தது போலும்...

                    ~ ஜெய்கபி 

Comments

  1. Eppudraaaaaa 😮 super ah irukku da Thambi 👍✨

    ReplyDelete

Post a Comment

Popular Posts