புதிது புதிதாய் முளைக்கிறார்கள்


காலை வேளையிலே
சாலையோரத்திலே
கிழிந்த சட்டையணிந்த
கலைந்த முடியுடைய
கொஞ்சத்திற்க்கும் கொஞ்சம்
அதிக அழுக்கான தோற்றம் கொண்ட
முக்தி பெற்ற பித்தன்
ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து
அருள் வாக்கு கூறினான்,
"கண்ட கண்ட நாய்க்கெல்லாம்
காதல் வருது" என்று.
அதை கேட்டு சிரித்துவிட்டு திரும்புகையில்
என் கண்ணில் பட்டவள் இவள்
இப்போது இவள் என் காதலி.

தற்போது அந்த மரத்தைச் சுற்றி 
நிறைய ரோஜாப் பூக்கள்...

மரத்தின் கீழ் ஆன்மீக வாதிகள்
இப்படித்தான் முளைக்கிரார்கள் போல...
       
             ~ ஜெய் கபி 

Comments

Post a Comment

Popular Posts