தட்டோடு நான் காத்திருக்கிறேன்...


பாழடைந்த வட்ட கிணறு
பால் நிலா காண காத்திருக்கிறது

கொதிக்கும் தார்ச்சாலை 
குதிக்கும் மழைக்கு காத்திருக்கிறது

பட்ட பனை மரம்
பச்சைக் கிளிக்காய் காத்திருக்கிறது

தட்டோடு நான்
கடவுளிடம் கேள்வி கேட்க காத்திருக்கிறேன்

கிணறு நிலவு பார்த்துவிட்டது
சாலை மழை பார்த்துவிட்டது
பனை கிளி பார்த்துவிட்டது

நான் கடவுளை பார்க்கவில்லை!

என் தட்டு சில்லறை
பார்த்தது;
பார்க்கிறது;
பார்க்கும் போல...

           ~ ஜெய் கபி 

Comments

Popular Posts