நகைத்து விட்டு நகர்ந்து விட வேண்டியது தான்..!


பகையாலிகள் 
வளர்ந்து விட்டார்கள்.

இத்தனைக்கும் 
நான் யாருக்கும் 
ஒன்றும் செய்யவில்லை

செய்ததெல்லாம் 
நன்மை மட்டுமே
கொடுத்ததெல்லாம் 
அன்பு மட்டுமே

அன்பு காட்டுபவர்களுக்கே 
இங்கு
அவமானங்கள் அதிகம்

கவலைகளை
கடந்து விட்டேன்.

மறுபடியும் தனியானேன்.
தனியாக ஆக்கப் படவில்லை
தனியாக ஆனேன்.

எனக்கிருக்கும் வேலையில்
இனி 
கவலை கொடுத்தவர்களை
எண்ணி 
கவலைப் பட நேரமில்லை

பகைவர்கள் 
படையோடு வந்தாலும் 
இனி பரவாயில்லை
நகைத்து விட்டு 
நகர்ந்து விட 
வேண்டியது தான்...! 

         ~ ஜெய் கபி 


Comments

Popular Posts