இம்முறை இங்கே...

தனித்தீவில்
தனியே நான்
கரையில் 
அமர்ந்திருக்கிறேன்

அலையோ 
என் காலை
முத்தமிடத் தயங்கி
வந்து வந்து
பின் வாங்குகிறது

பேச்சுத் துணைக்கு
ஆளில்லையென்று
கவலையோடு
கடலைப் பார்த்த
என்னிடம்,
நானிருக்கிறேன்
என்று நிலவு வந்தது.
பேசிக்கொண்டிருந்தோம்.

கடல் அலை
வாடைக்காற்று
நான் நிலா.....

இங்கு வர 
கோடிகள்
செலவழிக்கவில்லை
எனக்கு 
மூளையிலும் பாதிப்பில்லை
நான் போதையிலுமில்லை

"பறவையே எங்கு இருக்கிறாய்"
பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்

இம்முறை இங்கே...

மறுமுறை எங்கே
எப்படி இருப்பேனோ...! 
     
                ~ ஜெய் கபி 




Comments

Post a Comment

Popular Posts