சரஸ்வதி என்றாள் சிரித்துக்கொண்டே...

வெய்யிலில் சிக்னலில்
நின்றுகொண்டிருந்தேன்
அழுக்குச் சட்டையுடன்
கலைந்த கூந்தலுடன்
கிட்டத்தட்ட ஆறு வயதிருக்கும்
சிறுமி ஒருத்தி கையில் பேனாக்களுடன் 
கை நீட்டி என்னைப் பார்த்தாள்
அந்தப் பார்வையை இதுவரை
நான் பார்த்ததில்லை
இரண்டு பேனாக்கள் வாங்கினேன்
சிரித்தாள்
அப்படி ஒரு அழகிய சிரிப்பை
இதுவரை நான் கண்டதில்லை
பெயரைக் கேட்டேன்
சரஸ்வதி என்றாள்
சிரித்துக்கொண்டே...
நானும் வந்துவிட்டேன்
அழுதுகொண்டே...
    
             ~ ஜெய் கபி 

Comments

Popular Posts