அறிவொளி

நான் புத்தகம் 
வாசித்துக் கொண்டிருந்தேன்
அப்போது என் ஆள்காட்டி விரலை
அந்த வெண்தாளில் வைத்து
நகர்த்தி நகர்த்தி வாசித்தேன்
கொஞ்சம் உற்றுநோக்கினால்
என் விரலில் இருந்து 
வெளிச்சம் தெரிகிறது
அது புத்தகத் தாளில்
எதிரொளிக்கிறது.
எங்கிருந்து வருகிறது..!
ஓ...
அது அந்தப் புத்தகத்தால் 
எனக்குக் கிடைத்த 
அறிவொளியின் எதிரொளி
என்று கூட 
எடுத்துக் கொள்ளலாம் 

       ~ ஜெய் கபி 

Comments

Popular Posts