பிரம்மன் மறைத்து வைத்திருந்தான்
பிரம்மன்
ஒரு
ஓரினச் சேர்க்கையாளன் போல
அழகான பெண்களைப் படைத்து
பல ஆண்களை வலையில்
விழ வைத்துவிட்டு
இவன் இவனுக்கென
ரசித்து ரசித்து செதுக்கிய
ஒரு ஆண்மகனை
ரகசியமாக மறைத்து
வைத்திருந்திருக்கிறான்
அவனை
அடை மழையில்
குடையின்றி குடு குடுவன
ஓடி ஒதுங்கும்போது
நான் பார்த்துவிட்டேன்
பிரம்மா
இனி இவன்
எனக்கு தான்
விட்டு விடு
உன் சூட்சுமம்
தெரிந்து விட்டது
இவனை விடவும்
அழகு மகனை
உனக்கென உருவாக்கி
அவனை
உன்னிடமே வைத்துக்கொள்
பூலோகம் அனுப்பி
இன்னொரு பெண்ணையும்
பகைத்துக் கொள்ளதே...
~ ஜெய் கபி
Nice
ReplyDelete