தலையெழுத்தே என...
சாலையோர கோவிலில்
தட்டில் துட்டைப் போட்டு
தட்டில் இருக்கும் கற்பூரத்தை
தொட்டு நெற்றியில் ஒற்றும்
தந்தையைப் பார்த்து
கையிலிருந்த குழந்தையும்
தன் கையால்
நெற்றியில் ஒற்றுகிறது
இதைப் பார்க்கும் எனக்கோ
அந்தக் குழந்தை
தலையெழுத்தே எனத்
தலையில் அடிப்பது போல்
தெரிகிறது
~ஜெய் கபி
Comments
Post a Comment