நான்கு தலையிலும் மூளையில்லை

சுத்த வெவஸ்தைக் கெட்டவனாக இருப்பான் போல
கூறு கெட்டவனாக
இருப்பான் போல
என்னைப் படைக்கும்போது 
மூளையை மூலையில் வைத்திருப்பான் போல
ச்சை... நான் என்ன பிறவியோ!
காரணம் இவன் தான்.

பெண்களைக் கண்டால்
புணரத் தோன்றுகிறது
இல்லையைனில்
வன்புணரத் தோன்றுகிறது
அது பெண் குழைந்தையாயினும்

பெண்களை அடக்கி ஒடுக்கத்
தோன்றுகிறது
அடிக்கவும்
தோன்றுகிறது

பெண்களை மதிக்கவே
மனம் வருவதில்லை
மிதிக்கவே மனம்
விரும்புகிறது

பெண்கள் முன்னால்
நின்று பேசினாலே
ஏசத்தான் தோன்றுகிறது

அடிமைத் தேவைக்காகவே
பெண்களை மணக்கத் தோன்றுகிறது 

சமம் என்ற வார்த்தையைக்
கேட்டாலே சவுக்கால் 
அடிப்பது போலிருக்கிறது

பெண்கள் வளர்வதைப் 
பார்த்தால் வயிரெரிகிறது

பெண்கள் என்றாலே
பித்தம் தலைக்கு ஏறுகிறது

என்
அன்பை அடமானம் 
வைத்துத் தான்
எனக்கு இதயத்தை வாங்கி மாட்டியிருப்பான் போல

என் 
அறிவை அடமானம்
வைத்துத் தான்
எனக்கு மூளையை வாங்கி
மாட்டியிருப்பான் போல

பைத்தியக்காரன்!
அவனும் ஆண் தானே

போயும் போயும்
அவன் பெயரைப் போய் 
எனக்குச் சூட்டியிருக்கிரார்கள்

பிரம்மன். தூ.....!
    
             ~ ஜெய் கபி 


Comments

Popular Posts